Wednesday, 4 October 2017

HANUMAN BHAJAN SONGS

                                ஜெய் ஹனுமான்  பக்தி  பாடல்கள்                                                                                                                                                                                                                                           ஜெய் ஹனுமான் !ஜெய்  வீர  ஹனுமான்! ஜெய்  ஹனுமான்!  ஜெய் ஹனுமான்! ஜெய் ஜெய் ஹனுமான்! ஜெய் வீர ஹனுமான்!                                              வானரவீரா ! வாயுபுத்திர ! சத்ரு சம்ஹாரா! ஸ்ரீ சஞ்ஜீவி ராயா!                                           மாருதி  வீரா ! ஸ்ரீ ராமதூதா ! ஸ்ரீ  மஹானுபாவா! ஸ்ரீ அஞ்சினா தேவி புத்திரா!                                                                                                        ( ஜெய் ஹனுமான்                     பால ஹனுமந்தா! வானர லோகா!  கருணாகர தேவா!   ஸ்ரீ  கேசரி  மைந்தா !                                                                                                     (ஜெய்  ஹனுமான்                 குரு ஷேத்திர கமலா ! கருணாகர தேவா! வானர லோகா ! பிரம்மசாரிய தேவா!                                                                                                         (ஜெய் ஹனுமான்                   மஹேஸ்வர அவதாரா! துஷ்ட கிரஹ விநாசாய ! சத்ரு சம்கார! விஷ்வ ரூப ஹனுமந்தா!                                                                                   (ஜெய் ஹனுமான்                                                                                                                                                       

Sunday, 24 September 2017

Comedy

    •                          ஹனுமான் பக்தன்: தன் மனைவி தன் பேச்சை கேட்கவில்லை என்று அவளை திருத்துமாறு ஹனுமானிடம் வேண்டினான். .ஆனால் ஹனுமான் கூறினார்: இதன் காரணமாகவே தான் நான் திருமணம் செய்யவில்லை அதனால் உன் பிரச்சினையை என்னிடம் கொண்டுவராதே!பக்தன் கூறினான் உனக்கு வடை மாலை சாற்றியிருக்கிறேன் என்னை கை விட்டு விடாதே! உன் வடை மாலை எனக்கு வேண்டாம் நான் போய் வருகிறேன் 

Thursday, 7 September 2017

perathu selvi sakthi

                 பேராத்துச்செல்வியின் சக்தி!                                                                                                                                                                                                                                                                பொருனைநதிக்கரையிலே பொறுமையாய் கொலுவீற்றிருக்கும் பேராத்துச்செல்வியே!  குட்டத்துறையிலே நீராடி குஷ்ட நோயை போக்கியவளே! பேராத்துச்செல்வியே! செவ்வாய்க்கிழமையன்று கோலாகலமாய் காட்சியளிப்பவளே!! பேராத்துச்செல்வியே! ஆடியும் தைய்யும் எல்லா நாளும் உனக்குத் திருநாளே! பேராத்துச்செல்வியே! உனக்கு பொங்கலிட்டு வணங்கினால் வாழ்வை பொங்க வைத்து விடுவாயே! பேராத்துச்செல்வியே!                                                                                            (பொருனை நதி                                               மாவிளக்கு எடுத்து உன்னை வணங்கினால் மாபெரும் சக்தி தருவாயே!பேராத்துச்செல்வியே! நெல்லுக்கு வேலியிட்ட நெல்லையிலே சக்திரூபமானவளே! பேராத்துச்செல்வியே! தரணிபோற்றும் தாமிரபரணியில் மகா காளியே பேராத்துச்செல்வியே! சுடலையின் பார்வையில் நேராக காட்சி தருபவளே! பேராத்துச்செல்வியே! சித்திரை கடைசி செவ்வாயில் உனக்கு பூக்குழியே! பேராத்துச்செல்வியே! ஆடி மாதக் கூழ் அமிர்தம் உன் ஆலயத்திலே! பேராத்துச்செல்வியே!   (பொருனை நதி                                                                                                                                                                                                                                                       தாயாக பக்தரின் கண்ணீரை துடைப்பவளே! பேராத்துச்செல்வியே! தர்மம் காக்க பார் போற்றும்  பரணிக்கரையில் காட்சியளித்தாயே! பேராத்துச்செல்வியே! சண்டனையும் முண்டனையும் கொன்றவளே!   பேராத்துச்செல்வியே! மஹிஷாசுரனை அழித்தவளே! பேராத்துச்செல்வியே ! நவராத்திரி திருநாளில் கண் கொள்ளாத காட்சி யளிப்பவளே! பேராத்துச்செல்வியே! விஜய தசமி திருநாளில் வெற்றி தனை தருபவளே! பேராத்துச்செல்வியே! (பொருனை நதி                                                                     

Friday, 25 August 2017

VEDA NARAYANARIN MAKIMAI !

                  ஸ்ரீ வேத நாராயணன் மஹிமை!                                                                                                                                  வேதங்களுக்கெல்லாம் அதிபதி ஸ்ரீ வேத நாராயணா ! பாளை ஊரின் மையத்தில் அருள் பாலிப்பவரே! ஸ்ரீ வேத நாராயணா! மனக்குறைகளை அகற்றி வாழ்வு தந்தவரே! ஸ்ரீ ராஜ கோபாலா! ஸ்ரீ வேத நாராயணா! வேத வல்லி! குமுதவல்லியுடன் காட்சி தந்தாயே! அச்சுதா! ஸ்ரீ வேத நாராயணா!                                                                         ( வேதங்களுக்கெல்லாம்                                                                                                              மனநிறைவோடு பக்தர்களின் குறை  கேட்பவரே!ஸ்ரீ வேத  நாராயணா! பக்தர்களின் குறை தீர்ப்பவரே! பரந்தாமா! ஸ்ரீ வேதா நாராயணா! மரகத மேனியாய் வீற்றிருப்பவரே! மாதவனே! ஸ்ரீ வேத நாராயணா! பக்தர்களின் குரல் கேட்டு பாற்கடலிலிருந்து துயில் எழுந்து அமர்ந்தாயே! ஸ்ரீ வேத நாராயணா!

                                               ( வேதங்களுக்கெல்லாம்

  கொலு மண்டபத்தில் ஸ்ரீ ராஜாகோபால ஸ்வாமியாய் வீற்றிருப்பவரே! ஸ்ரீ வேத நாராயணா! உம் புகழை ஒரு வரியில் பாட முடியுமா! ஸ்ரீ வேத நாராயணா! உம் புகழை பல்லாண்டு பல்லாண்டு காலமும் கூறலாமே ! ஸ்ரீ வேதா நாராயணா! பாடகரின் பாடல்களை ரசிப்பவரே! ஸ்ரீ  வேதா நாராயணா!

                                               ( வேதங்களுக்கெல்லாம் 

 

Friday, 18 August 2017

sri neevasan pugal

                                          ஸ்ரீ னீவாசன் புகழ்!             ஏழு மலை மேலே வாஸம் செய்யும்     ஸ்ரீ னீவாசனே!  உந்தன் புகழ்  நாளுக்கு நாள் கூடுதய்யா ஸ்ரீ னீவாசனே! அடியார்கள் குறை தீர்க்கும் ஸ்ரீ னீவாசனே ! கோவிந்த நாமம் கேட்கையிலே பரவசம் பெருகுதைய்யா ஸ்ரீ னீவாசனே ! உன் தரிசனம் கிடைத்தவுடன் ஆனந்தம் பெருகுதைய்யா ஸ்ரீ னீவாசனே ! திருமகளின் நாதனே ஸ்ரீனிவாசனே ! திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீ னீவாசனே!ஆதி சேஷன் மீது துயிலும் பரந்தாமனே! ஸ்ரீ னீவாசனே ! ஹரியே ஆனந்தம் உன் திருவடி ஆனந்தம் ஸ்ரீ னீவாசனே ! ஸ்ரீ வாரி லட்டு கிடைத்தவுடன் ஆனந்தம் பெருகுதைய்யா  ஸ்ரீ னீவாசனே ! எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஸ்ரீனிவாசனே ! உனை காண புகழ் கிடைக்குதய்யா ஸ்ரீ னீவாசனே! கோடி ஜென்மம் எடுத்தாலும் உன் நாமத்தை நான் மறவேன் ஸ்ரீ னீவாசனே !என்றும் நான் உன் பக்தன் ஸ்ரீ னீவாசனே ! ஸ்ரீ னீவாசனே !
                                                                     

Wednesday, 16 August 2017

கணபதி துதி


வினைகள் தீர்க்கும் விநாயகனே!      கணங்களின் அதிபதி கணநாதனே! வெற்றிகள் அருளும் வேழமுகனே!  லாபத்தை தந்திடும் லம்போதரனே!   ஐயங்கள் அகற்றும் ஐங்கரனே!       கஷ்டங்கள் போ
க்கும் கணபதியே!  இஷ்ட தெய்வம் முழுமுதற் கடவுளே!  பிள்ளையாரே! உன்னை துதித்து வணங்கி போற்றிடுவோமே!