பேராத்துச்செல்வியின் சக்தி! பொருனைநதிக்கரையிலே பொறுமையாய் கொலுவீற்றிருக்கும் பேராத்துச்செல்வியே! குட்டத்துறையிலே நீராடி குஷ்ட நோயை போக்கியவளே! பேராத்துச்செல்வியே! செவ்வாய்க்கிழமையன்று கோலாகலமாய் காட்சியளிப்பவளே!! பேராத்துச்செல்வியே! ஆடியும் தைய்யும் எல்லா நாளும் உனக்குத் திருநாளே! பேராத்துச்செல்வியே! உனக்கு பொங்கலிட்டு வணங்கினால் வாழ்வை பொங்க வைத்து விடுவாயே! பேராத்துச்செல்வியே! (பொருனை நதி மாவிளக்கு எடுத்து உன்னை வணங்கினால் மாபெரும் சக்தி தருவாயே!பேராத்துச்செல்வியே! நெல்லுக்கு வேலியிட்ட நெல்லையிலே சக்திரூபமானவளே! பேராத்துச்செல்வியே! தரணிபோற்றும் தாமிரபரணியில் மகா காளியே பேராத்துச்செல்வியே! சுடலையின் பார்வையில் நேராக காட்சி தருபவளே! பேராத்துச்செல்வியே! சித்திரை கடைசி செவ்வாயில் உனக்கு பூக்குழியே! பேராத்துச்செல்வியே! ஆடி மாதக் கூழ் அமிர்தம் உன் ஆலயத்திலே! பேராத்துச்செல்வியே! (பொருனை நதி தாயாக பக்தரின் கண்ணீரை துடைப்பவளே! பேராத்துச்செல்வியே! தர்மம் காக்க பார் போற்றும் பரணிக்கரையில் காட்சியளித்தாயே! பேராத்துச்செல்வியே! சண்டனையும் முண்டனையும் கொன்றவளே! பேராத்துச்செல்வியே! மஹிஷாசுரனை அழித்தவளே! பேராத்துச்செல்வியே ! நவராத்திரி திருநாளில் கண் கொள்ளாத காட்சி யளிப்பவளே! பேராத்துச்செல்வியே! விஜய தசமி திருநாளில் வெற்றி தனை தருபவளே! பேராத்துச்செல்வியே! (பொருனை நதி


My 4th attempt
ReplyDeleteMy 4th attempt
ReplyDeleteAmman pugal paravatum
ReplyDeleteNellai amman pugal
ReplyDeleteNellai amman pugal
ReplyDelete